ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம்




தோற்றம்: 1851



SINCE: 1851

SRI MARATHANDAVAR AALAYAM

முக்கிய அறிவிப்பு


FLASH NEWS

Scroll Paper Cartoon

ஶ்ரீ மரத்தாண்டவர் ​பெருமானின் 93-ஆம் ஆண்டு ​பங்குனி உத்திர மகோற்சவம் ​24/03/24~25/03/24

93rd PANGGUNI

UTHIRAM FALLS ON ​24/3/24~25/3/24

Fading American Yellow Gradient
ஆலய வரல ற


சுமார் 170 வருடங்களுக்கு முன் கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நகருக்கு ​சாலை போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரு பெரிய மரத்தை ​வெட்டும்போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது.


அதே வேளையில் மரம்வெட்டிக்கொண்டிருந்த தமிழர் ஒருவருக்கு அருள் ​வந்து, அவர் அந்த மரத்தை வெட்டக்கூடாதென்றும் சாலையைச் சிறிது ​தூரத்திற்கு அப்பால் போடவேண்டுமென்றும் சொன்னார். அதைச் செய்ய ​மறுத்தார் ஆங்கிலேய மேற்பார்வையாளர். உடனே சிறிய குழந்தை ​வடிவுகொண்ட தழும்பு அந்த மரத்தில் தோன்றியது. அதைப்பார்த்து வியந்த ​மேற்பார்வையாளர் மரத்தை வெட்டாமல் சாலையை சிறிது தூரத்திற்கு ​அப்பால் போட உத்தரவிட்டார்.


அன்றிலிருந்து அந்த இடம் ஒரு புனித இடமாகியது. ஸ்ரீ மரத்தாண்டவர் என்ற ​பெயர் அமைந்தது. இங்கு தூய பக்தியோடு வருபவர்களுக்கு எல்லா ​நன்மைகளும் வந்து சேர்கின்றன. ஊனமுற்றோர் நடப்பது, ஊமைகள் ​பேசுவது, நோயுற்றோர் குணமாவது போன்ற அற்புதங்கள் பல இங்கு ​நிகழ்ந்து வருகின்றன.


அப்போதெல்லாம் இங்கு அடிக்கடி நிகழும் அற்புதம் என்னவென்றால், இந்தச் ​சாலையில் செல்லும் வாகனம் ஏதும் நிற்காமல் சென்றால் சிறிது தூரம் ​சென்றவுடன் ஓடமுடியாமல் நின்றுவிடும். கோயிலிலிருந்து விபூதியை ​தேய்த்தபின்தான் மீண்டும் ஓடும். பங்குனி உத்திரம்தான் இந்தக் கோயிலின் ​மிகச் சிறப்பான நாள். பல பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. ​அந்தக்காலத்தில் சுமார் 300 அர்ச்சனைகள் நடைபெறும். இப்போது 300,000 ​மேல் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன."

HISTORY OF TEMPLE

About 170 years ago, construction of the road from Kuala Lumpur to ​Kuantan was in progress here. When a large tree was being chopped, it ​started to bleed. One of the Tamil workers went into a trance at the same ​time. He said that the tree should be spared and the road laid a short ​distance away. The British supervisor refused. To everybody's ​astonishment a figure of a child appeared on the trunk of the tree. The ​supervisor was surprised and changed his mind. The road was laid away ​from the tree. The place became sacred, and it took the name of Sri ​Marathandava Bala Dhandayuthapani (Lord Murugan). Several true ​devotees have experienced miracles here. They are bestowed with good ​fortunes in their lives. The lame had walked, the dumb has spoken and the ​chronic sick - healed. These miracles are still occurring!


His temple was made up of zinc sheets and wooden planks. The usual ​miracle that occurred here then was, if any vehicle passes by this temple ​without stopping, it will stall a short distance later and will not restart ​until the Vibuthi (Holy Ash) from the temple is applied on it!


Panguni Uthiram (March/April) is the grand festival here. In those days ​there used to be around 300 'archanai's. Now the number exceeds ​300,000! ‎

Fading American Yellow Gradient
Fading American Yellow Gradient
க வ ல மரத த ன
வரல ற மற ற ம பலன


இக்கோயிலின் பெயர் 'மரத்தாண்டவர்' என்பது மரத்தின் தெய்வம். இந்தச் ​சூழலில் குறிப்பிடப்படும் மரம் புனிதமான ருத்ராட்ச மரம். ருத்ராக்ஷம் என்பது ​சிவபெருமானின் கண் என அடையாளப்படுத்தப்படுகிறது, இதன் மூலம் ​ருத்ரா என்பது சிவபெருமானையும் அக்ஷ என்பது கண்ணையும் குறிக்கிறது. ​இந்த தெய்வீக மணி இறுதியான புனித தாயத்து ஆகும், ஏனெனில் இது ​எதிர்மறை ஆற்றலை நேர்மறை ஆற்றலாக மாற்றுகிறது. ருத்ராட்ச மணிகள் ​ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் யோகிகளால் ​ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் ஆன்மீக அதிகாரத்தைப் பெறுவதற்கும் ​அணிந்து வருகின்றன


தற்போது ருத்ராட்ச மரமும் இறந்து கிடக்கிறது. இருப்பினும், மரத்தின் ​எச்சங்கள் கோயிலின் உள் கருவறையில் பாதுகாக்கப்படுகின்றன. 1998 ஆம் ​ஆண்டில், ருத்ராட்ச மரத்தின் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புதிய கோயில் ​கட்டப்பட்டது. பைரவர், இடும்பன் மற்றும் நாக அம்மன் ஆகியோருக்கு ​அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகளும் உள்ளன. இந்த அற்புதமான வழிபாட்டுத் ​தலத்தில் இப்போது மற்றொரு பெரிய மரம் ஒரு மையப் புள்ளியாக உள்ளது. ​மஞ்சள் துணியில் கல், நாணயம் அல்லது சுண்ணாம்பு வைத்து பக்தர்கள் ​கோரிக்கைகளை உறுதிமொழி எடுக்கின்றனர். பின்னர் அவர்கள் மரத்தின் ​மீது துணியைக் கட்டி, தாழ்மையுடன் பிரார்த்தனை செய்கிறார்கள்.


வேண்டுதல் நிறைவேறினால் சபதம் நிறைவேறும். கோவிலுக்கு ​நன்கொடை அளிப்பது, கோவில் பக்தர்களுக்கு உணவு வழங்குவது அல்லது ​மரத்தின் கொடிகளில் ஒரு சின்ன வெள்ளி தொட்டில் கட்டுவது போன்ற ​சபதம் இருக்கலாம். சிலர் நன்றியுணர்வின் அடையாளமாக இந்த மரத்தின் ​மீது குழந்தை பொம்மையைக் கட்டுகிறார்கள். மேலும், இந்த கோவில் ​பக்தர்களுக்கு வரம் அளிப்பதில் புகழ்பெற்றது

HISTORY OF THE TREE
AND THE BENEFIT

The name of the temple 'Marathandavar' means deity of the tree. The tree ​mentioned in this context is the sacred rudraksha tree. Rudraksha is ​identified as the eye of Lord Shiva, whereby Rudra denotes Lord Shiva and ​Aksha indicates the eye. This divine bead is the ultimate holy talisman, as ​it transforms negative energy into positive energy. Rudraksha beads have ​been worn by the yogis of India for thousands of years to maintain health ​and to gain spiritual empowerment.


Rudraksha tree is now dead. However the remains of the tree are ​preserved in inner sanctum of the temple. In 1998, a new temple was built ​which incorporated features of the rudraksha tree. The inner sanctum has ​a beautiful silver layering that resembles the original rudraksha tree. ​There are other shrines dedicated to Lord Bhairavar, Lord Idumban and ​Goddess Naga Amman. Another huge tree is now a focal point in this ​wondrous place of worship. Devotees pledge requests by placing a stone, ​coin or a lime on a yellow cloth. Subsequently they tie the cloth onto the ​tree and humbly utter a prayer. If the request is fulfilled, hence the vow ​will be fulfilled. The vow could range from donating to the temple, serving ​food to temple devotees



Fading American Yellow Gradient
Fading American Yellow Gradient
க வ ல ல
உள ள த ய வங கள
DETIES INSIDE THE TEMPLE
Fading American Yellow Gradient
Fading American Yellow Gradient
COMMITTEE MEMBERS
Transparent gradient yellow
பண ட க கள மற ற ம ந கழ வ கள
FESTIVALS AND EVENTS

பங்குனி உத்திரம்

PANGGUNI UTHIRAM


பங்குனி உத்திரம் என்பது சிவன் மற்றும் முருக பக்தர்களால் கொண்டாடப்படும் ஒரு மங்களகரமான ​நாளாகும்.. பங்குனி நட்சத்திரம் பௌர்ணமியுடன் இணைந்திருப்பதால், இந்த நாளில் சிவன்-பார்வதி, ​ராமர்-சீதை, முருகன் மற்றும் பல தெய்வீக திருமணங்கள் நடந்தேரப்பெரும்.கோவில்கள் பொதுவாக இந்த ​நாளில் பிரம்மாண்டமான திருமண கொண்டாட்டத்திற்கு தயாராகுவது வழக்கம். தமிழ் நாட்காட்டியின் 12 ​வது மாதமான பங்குனியில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நன்நாளில் சந்திரன், ​உத்திரம் நட்சத்திர மண்டலத்தில் விழுகும். பங்குனி உத்திரம் கொண்டாட்டத்தின் போது, ​​​​பக்தர்கள் பல்வேறு ​சமய சடங்குகளை செய்வார்கள். இந்த புனிதமான நாளில் ,பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் மற்றும் கந்த ​புராணங்கள் போன்ற புனித நூல்களை முருகனிடம் ஆசீர்வதிப்பார்கள்.இதுமட்டும்மல்லாமல் முருகனுக்கு ​காணிக்கையாக அலங்கரிக்கப்பட்ட காவடிகள்,மரங்கள் மற்றும் உலோக அமைப்பு கொண்ட பொருளை, ​கொண்டு செல்வது நியதியாகும்


Pangguni Uthiram is an auspicious day celebrated by the Shiva and Murugan devotees.As the ‘Panguni’ ​natchathiram coincides with a full moon, this day has witnessed many divine marriages such as the ​Thirukalyanam of Shiva-Parvati, Rama-Sita, Lord Murugan and many others.Temples usually prepare for ​a grand celebration of celestial weddings on this day.The festival is celebrated on the 12th month of ​the Tamil calendar, Pangguni, during which the moon “enters” the Uthiram constellation. During the ​celebration of Panguni Uthiram, devotees perform various religious rituals and recite sacred books, ​such as Kanda Shashti Kavasam and Kanda Puranam to seek blessings from Lord Murugan. They also ​carry a Kavadi, a decorated wooden or metal structure, to Lord Murugan's temple as an offering.


மாறான் நடை பயணம்

MARAN WALK

Celebration of Traditional Festival


மாரான் நடை என்பது, 204 கிலோமீட்டருக்கு பத்துமலை சிலாங்கூர், ஸ்ரீ சுப்ரமணியர் ஸ்வாமி கோவிலில் ​தொடங்கி மாரான் பகாங்கில் உள்ள ஸ்ரீ மரத்தாண்டவர் கோவில் வரை பக்தர்கள் ஆன்மிகம் நிறைந்து ​நடப்பார்கள். இந்த வருடாந்திர நடை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பங்குனி உத்திரம் ​திருவிழாவை ஒட்டி ஸ்ரீ மாரத்தாண்டவர் கோவிழுக்கு யாத்திரையாக ​தொடங்கியது.இன்றுவரையில்,பெரும்பாலோர் பக்தர்கள் தனது முழு ஈடுபாட்டை செலுத்தி ​வருகின்றனர்.



Maran walk is a spiritual and recreational walk from Batu Cave Selangor, Sri Subramaniar Swamy ​Temple to Sri Marathandavar Temple in Maran Pahang covering an estimated distance of 204km. This ​annual walk started about 35 years ago as a pilgrimage walk to the Sri Marathandavar Temple to ​coincide with the Hindu Pangguni Uthiram Festival. Today both Hindus and non-Hindus take part in this ​event both as a ritual and as a recreational event.


Transparent gradient yellow
க ய ல வசத கள
TEMPLE FACILITIES
Transparent gradient yellow

தங்கும் விடுதி

HOTEL


நம் மரதாண்டவர் ஆலயத்தில்,தங்கும் வசதிகளும் உண்டு.நாங்கள் இங்கு இரண்டு வகையான ​தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்து உள்ளோம்.தூரத்தில் இருந்து பூஜை செய்ய வருபவர்கள் ​கோவில் ஏற்பாடு செய்து கொடுத்த அறையிலே பூஜை முடியும் வரை தங்கிக்கொள்ளளாம்.இதன் ​மூலம் நேரத்தையும் சேமிக்க முடிகிறது.பெரும்பாலோர் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ​கோவிலில் நடவடிக்கை இருப்பவர்கள் இங்கு தங்குவார்கள்.அதுமட்டுமல்லாமல் கோவிலில் ​சடங்குகள்,கல்யாண நிகழ்ச்சி போன்ற விழாக்களின் போதும் மக்கள் நாங்கள் ஏற்படுத்தி கொடுத்த ​விடுதியில் தங்க முடியும்.இதன் மூலம்,மக்களுக்கு தங்கும் கஷ்டங்கள் ஏற்படாது .அருகில் ​இருப்பதால்,வேலையும் எழிமையாக முடிந்து விடும்,மனனிரைவாகவும் இருக்கும்.மேலும்,நம் ​கோவிலும் அமைதியான சூழலிலே அமைந்துள்ளது

We offer two types of accommodations near Sri Marathandavar Temple which is for VIPs and Standard ​rooms. Staying at hotel near Sri Marathandavar Temple offer several benefits such as time and energy ​saving. Save time and energy by being close to the temple, especially during early morning or late-night ​activities. Other than that, proximity to religious activities. Convenient access to religious ceremonies, ​rituals, or events happening at the temple and Sri Marathandavar Temple offer a serene environment, ​contributing to a peaceful and calm stay


To book , please contact us directly at

019-8128050/019-8238050



இலவச உணவு

FREE FOOD

ஸ்ரீ மார்த்தாண்டவர் கோவில் நிர்வாகம், தினமும் இலவச உணவு வழங்குவதை ஏற்பாடு ​செய்துள்ளனர்.இங்கு அவர்கள் மூன்று வேலை உணவு பரிமாருகின்றனர்.காலை,மாலை மற்றும் ​இரவு ஆகும். அனைவருக்கும் சேவை செய்வதற்கான ஒரு கருணைச் செயலாக இவை கருதப்பட்டு ​வருகிறது.இந்த இலவச அன்னதானத்திற்குத் தங்களால் இயன்ற பணத்தையும் வழங்கலாம். நீங்கள் ​வழங்கும் நன்கொடை மூலம் நாங்கள் தினமும் வரக்கூடிய பக்தர்களுக்கு வயிர் நிறைய உணவு ​வழங்க இயலும்.பணம் கொடுக்க நினைக்கும் நல்லுலங்கள் அனைவரும்,கோவிலின் ​நிர்வகாஸ்தரை கண்டு கொடுக்கலாம்.

Sri Marathandavar Temple management serve free food to the needy daily. They serve for 3 times a day ​which is for breakfast , lunch and dinner. By right this is intended to be an act of kindnes to serve all, ​including those who are well to do and in return, these well to do people could donate some money to ​this free Annadhanam as they have many people who come here that can't even afford a single meal ​and this money is used to feed those in need


பல்வேறமான ​கடைகள்

VARIETY OF STALL

கோவிலுக்கு அருகில் உணவு மற்றும் பூஜைக்கு தேவையுள்ள பொருள்களை வாங்குவதற்கு கடைகள் ​அமைக்கப்பட்டுள்ளது . பக்தர்கள் யாரேனும் பூஜை பொருள்களை வாங்க வேண்டும் என்றால்,இங்கே ​வந்து வாங்கிக் கொள்ளலாம்,தூரமாக சென்று பொருள்களை வாங்கி வர அவசியம் ​ஏற்படாது.அதுமட்டுமல்லாமல்,பசி ஏற்பட்டால் கோவில் அருகாமையில் உள்ள கடைகளில் இருந்து ​பிள்ளைகளுக்கு குளிர் பாந்தங்களோ அல்லது முறுக்குகளோ வங்கிக் கொடுக்கலாம்.நேரமும் ​சேமிக்க முடியும்,வெளியே சென்று அலயவும் தேவையில்லை. இங்கு அமைக்கப்பட்ட பலவிதமான ​உணவுக் கடைகளில் மக்களால் பல்வேறு உணவ வகைகளை ஆராய்ந்து ரசிக்க ஒரு வாய்ப்பாக ​அமையும். அதே சமயம் பிரார்த்தனைப் பொருட்களை விற்கும் கடைகள் கலாச்சாரம் சார்ந்த ​பொருள்களையும் மக்களுக்காக விற்கின்றனர். பார்வையாளர்கள் ஒரே இடத்தில்,சமயப் பொருட்கள் ​மற்றும் சிற்றுண்டிகள் இரண்டையும் வசதியாக வாங்கலாம்.அவர்களின் கோவில் வருகையின் ​பொழுது நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்தலாம்.

The presence of a variety of stalls, including food and prayer items, near a temple offers several ​benefits such convenience. Visitors can conveniently find both sustenance and religious items in close ​proximity, enhancing their overall temple experience. A range of food stalls allows people to explore ​and enjoy diverse cuisines, while prayer item stalls cater to different religious practices, reflecting ​cultural richness. Visitors can conveniently purchase both religious items and refreshments in one ​location, saving time and effort during their temple visit


கழிவறை

TOILET

மார்த்தாண்டவர் கோவிலில் 50 யூனிட் ஆண் கழிப்பறைகளும், 50 யூனிட் பெண் கழிப்பறைகளும் ​உள்ளன. பார்வையாளர்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலை உறுதிசெய்கிறது.போதிய ​அளவு கழிப்பறைகள் இருப்பதனால் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க அவசியம் ​ஏற்படாது,தேவைப்படுகிற நேரத்தில் உள்ளே சென்று தன் கடன்களை முடித்து விட்டு ​வரலாம்.மேலும்,நம் கோவில் கழிப்பறை சுத்தமாகவும்,அகலமாகவும் இருக்கும்.பெண்கள் தன்னை ​செரி செய்து கொள்ள,கழிப்பறை உள்ளே ஒரு இடம் இருக்கிறது.அங்கு அவர்கள் முடியை மற்றும் ​ஆடையை செரி செய்துக் கொள்ள இயல்பாக இருக்கும்.அதுமட்டுமல்லாமல்,நமது கோவிலில் ​தினமும் கழிவறை சுத்தம் செய்யவும் ஆட்களை வைத்திருக்கிறோம்,ஆகவே சுத்ததிற்கு இங்கு ​பஞ்சமில்லை.கவலை இல்லாமல் சென்று வரலாம்

There are 50 unit of male toilets and 50 unit of female toilets at Sri Marathandavar temple. Ensures a ​clean and sanitary environment for visitors, promoting overall hygiene within the temple premises. ​Next, accommodates a large number of visitors, preventing long queues and ensuring a smooth ​experience during religious events and gatherings. Other than that, enhances the overall comfort of ​visitors, allowing them to focus on their spiritual experience without concerns about restroom ​availability


மண்டபம்

HALL

இந்த மண்டபம் சமூக நிகழ்வுகள், பொது கூட்டங்கள் மற்றும் மத விழாக்களுக்கான இடமாக ​செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வழிபாட்டாளர்களிடையே சமூக உணர்வை வளர்கின்றது. ​இம்மண்டபம் மதச் செயல்பாடுகள், விழாக்கள் மற்றும் திருவிழாக்களுக்கு இடமளிக்கும் இடமாக ​திகழ்கிறது. இதுமட்டுமல்லாமல் இங்கு கலாச்சார மற்றும் கல்வி நிகழ்வுகளை நடத்துவதற்கும் ​நாங்கள் இடமளிக்கிரோம்.அருகில் இருப்பதனால் வேலைகளும் எளிதாக முடிகிறது

The hall serves as a space for community events, gatherings, and religious ceremonies, fostering a ​sense of community among worshippers. It accommodates religious functions, ceremonies, and ​festivals, allowing for larger congregations and celebrations. The space facilitates cultural and ​educational events, promoting the sharing of traditions and knowledge within the community


வாகனம் ​நிறுத்தும் இடம்

CAR PARKING AREA

நமது கோவில் அருகாமையில் வாகனம் நிறுத்தும் இடமும் வசதியான முறையில் அமைகப் ​பட்டுள்ளது.ஆகவே,ஒரு குடும்பத்தில் இருந்து 10 வாகனங்களை கொண்டு வந்தாலும் கவலை ​இல்லை.அதற்குரிய இடம் இங்கு தாராளமாக இருக்கிறது.மேலும்,கோவில் அருகாமையில் ​இருப்பதனால் பக்தர்களுக்கு வெகு தொலைவு நடந்து வர அவசியம் ​ஏற்படாது.மக்களும்,சரியானநேரத்தில் பூஜையில் கலந்து கொள்ள முடியும்

Huge parking space provides convenience for worshippers, making it easier for them to access the ​temple without concerns about parking availability. Adequate parking contributes to a positive visitor ​experience, reducing stress associated with finding parking and allowing worshippers to focus on their ​spiritual activities. A spacious parking facility also encourages more people to attend temple events, ​fostering a sense of community engagement and participation


அர ச சன
ARCHANAI

அர்ச்சனை

AR​CHANAI

ஶ்ரீ மரதாண்டவர் ஆலயத்தில் அர்ச்சனையும் செய்யபடுகிறது.பக்தர்கள் யாரேனும் அர்ச்சனை செய்ய ​வேண்டும் என்றால் பொருள்களை வெளிய உள்ள கடைகளில் இருந்து வாங்கி வந்து அற்சனையை ​மேற்கொள்ளலாம்.அர்ச்சனை செய்வதற்கான சீட்டினை நீங்கள் அலுவலகத்தில் ​பெற்றுக்கொள்ளலாம்.பக்தர்கள் கோரிக்கைக்கு ஏற்ப கோவில் பூசாரி உங்கள் தேவையை நிறைவு ​செய்வார்


சீர் தட்டு = RM 10.00

பால் குடம் = RM10.00

பழ அர்ச்சனை = RM5.00

முடி காணிக்கை = RM20.00

வாகனம் அர்ச்சனை = RM






Archanai, also known as Archanai, is a significant Hindu religious ritual practiced at the Sri ​Marathandavar Temple. During Archanai, devotees express their devotion and seek the blessings of the ​deity by chanting sacred verses, hymns, and reciting the names of the gods. This worship involves ​making offerings such as flowers and fruits to the deity. At Sri Marathandavar Temple, devotees ​interested in performing Archanai can obtain tickets from the temple office, and the ritual is conducted ​either by the worshippers themselves or by the temple priests. The act of Archanai is considered a way ​to connect with the divine, seeking divine intervention, protection, and spiritual guidance


Seer thattu = RM10.00

Paal kudam = RM10.00

Pala Archanai = RM5.00

Mudi Kanikai = RM20.00

Vaganam archanai = RM

Transparent gradient yellow
ம ன ன ற றத த ற க க இங க ப க ர ச ய ய ங கள
COMPLAIN FOR ANY IMPROVEMENT
Transparent gradient yellow
Transparent gradient yellow
சம க ஊடகங கள
SOCIAL MEDIA
Click Here Web Button
Click Here Web Button
Transparent gradient yellow
க வ ல ன இடம
THE LOCATION OF THE TEMPLE
Transparent gradient yellow

மேலும் தகவலுக்கு

எங்களை தொடர்பு ​கொள்ளவும்



CONTACT US FOR

MORE INFORMATION


Tech Support

Cloud with Paper Document File Flat    Style

019-8128050/019-8238050

Done Deal Handshake Flat    Icon

TEMPLE ADDRESS

KM 100, JALAN KUANTAN-JERANTUT,26500

MARAN PAHANG DARUL MAKMUR

Folder Document Education Block and Flat Icon

EMAIL

srimarathandavar@gmail.com

Paper Document with Pen Flat Style Icon

Report Incident

At our website

youtube


DESIGNED BY KANTHARA PRODUCTION